பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

81



இத்தகைய இனிய நோக்கத்திற்காகத் தான் நாம் உண்கிறோம். உணவினை ஐந்து வகைப் பிரிவுகளாகப் பகுத்துக் காட்டுவார்கள் விஞ்ஞானிகள். கார்போஹைடிரேட் (Carbohydrate,) புரோட்டீன். (Protein) மினரல்கள். (Minerals) கொழுப்பு, (Fats), வைட்டமின் (Vitamin). இந்த ஐந்து வகைச் சத்துக்களைத் தரும் உணவுப் பண்டங்களாகப் பார்த்து, தேவையான அளவில் பெற்று, சம நிலை உணவாகக் கொண்டால் உடல் சத்தும் சாதுர்யமும் நிறையப் பெற்று வாழும் வளரும் என்றெல்லாம் அறிஞர்கள் விளக்கிக் கூறுகின்றார்கள்.

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து வாங்குகின்ற அளவுக்குப் போதிய பொருளாதார வசதியுமில்லை, அளந்து பார்க்க, உடலைத் தெரிந்து அதற்கேற்ற வகையில் உணவுப் பொருட்களை வாங்க நேரமுமில்லை, நெஞ்சமுமில்லை, அறிவும் இல்லை. விரைந்து போகின்ற கால வெள்ளத்தில், எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இதையெல்லாம் எண்ணிப் பார்க்க ஏது நேரம்? ஏது எண்ணம்?

என்றாலும் நாம் அன்றாடம் உணவு உட்கொண்டுதானிருக்கிறோம். கேட்கின்ற அளவுக்கு கிடைக்கவில்லையேயென்றாலும், கிடைக்கின்றதை எப்படி உண்பது என்பதைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கென்று கிடைக்கும் உணவை எப்படித்தான் பயன்படுத்துவது என்பதை நமது அறிவார்ந்த செயலாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்றால் அது ஆளுக்கு ஆள் வேறுபடும். மாறுபடும், ‘ஒரு மனிதனின்