பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உணவு மற்றொரு மனிதனுக்கு விஷம்’ என்று ஒரு பழமொழியையும் கூறுவார்கள். ஆக, உடல் அமைப்புக்கு ஏற்ப, வசிக்கின்ற சீதோஷ்ண நிலைக்கேற்ப, செய்கின்ற கடினமான வேலைகளுக்கேற்ப உணவு உட்கொள்ளும் அளவு மாறுபட்டுத்தான் இருக்கும். ஆனால், குறிப்பிட்ட ஒரு மனிதன் எவ்வளவு சாப்பிடலாம் என்றால், வயிறார, வயிறு முட்ட, தொண்டையளவு என்றெல்லாம் அளவினைக் கூறுவதும் உண்டு.

ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி; மூன்று முறை உண்பவன் ரோகி. என்பதாக ஒரு பழமொழி உண்டு. இந்தக் காலத்தில் எத்தனை முறை என்பது நம் எண்ணிக்கைக்கு உட்படுகிறதா என்ன? பார்த்த இடங்களில் பழகிடும் நேரங்களில், தனக்காகவும், மற்றவர்களுக்காகவும் உண்ணுகின்ற நாகரிகக் காலம் அல்லவா இது!

ஆனால், சாப்பிடும் நேரத்தில், எந்த அளவு உண்டால் வயிற்றுக்கும் இதமாகவும் மனதுக்கு இனிமையாகவும் இருக்கும் என்று அறிந்து கொண்டால், மிக நன்றாக இருக்கும். வயிற்றில் அரைபங்கு உணவு, கால்பங்கு நீர் இப்படி சாப்பிட்டால், அது ஜீரணமாகும் பொழுது ஏற்படுகின்ற மாறுதலில், வாயு ஏற்படும் பொழுது (Gas) அங்கேயே சுற்றிச் சுற்றி அடங்கிப்போக வாய்ப்பு உண்டு என்று அரை வயிறு உணவுதான் சாலச் சிறந்தது என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலர் கூறுகிறார்கள். சாப்பிட்டுக் கொண்டே வரும்பொழுது இந்த ஒரு வாய் உணவை