பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


'கடவுளிடம் அடிமையாக இருந்து, சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும், அவதிப்பட்டாலும் சுதந்திரமாக வாழ்வதே இன்பம் பயக்கிறது. இதுவே எனக்குப் பேரின்ப பூமி என்று நரகத்தை ஏற்பதாக மில்டன் எனும் மேல் நாட்டுப் புலவர் தனது 'இழந்த சொர்க்கம் என்னும் நூலில் எழுதுகிருt சொர்க்க மும் நரகமும் இன்பமும் துன்பமும் எதி ரே கிடக்கின்ற, தினமும் கிடைக்கின்ற சூழ் நிலயில் இல்லை, அது மனதிலே தான் மிகுந்து கிடக்கிறது. மிளிர்ந்து விளங்குகிறது. என்பதைத்தான் நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். மனம் தான் மிகவும் முக்கியம் என்ரு ல், அந்த மனதைப் பற்றி, மக்கள் என்னென்ன கூறுகின்ரு tகள் தெரியுமா? 'மனம் ஒரு குரங்கு அதை ஒரு நொடிப் பொழுதும்கூட ஒரிடத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அடங்காத அது. அங்குமிங்கும் அலைபாய்ந்தவாறு கிளே தோறும் தாவிக் கொண்டிருக்கும் என்கிரு கள். மனம் ஒரு கடல். அது நொடிக்கு நொடி நூறு அகல களைக் கொண்டு வந்து தள்ளிவிட்டுப் போவது போல, நூருயிரம் எண்ணங்களைக் கொண்டு வந்து நிறைத்துவிட்டு, நிலை மாற்றி விடும் என்று சிலர் கூறுகின்ருர் கள். மனம் ஒரு கோழி போல. கோழியை கூட்டில் அடைப் பதற்காகத் தூக்கிலுைம் கத்தும். அதை அறுப்பதற்காகத் துாக்கிக் கொண்டாலும் அதே வேகத்தில் அலறிப் புடைத்துக் கத்தும். அதுபோலவே, மனம் என்னும் கோழி எதற்கெடுத்தாலும் மருண்டு, வெருண்டு அல்லவா கத்திக் கூப்பாடு போட்டு, மனிதரை அலறடித்து அல்லல்படுத்தி விடுகிறது என்பாரும் உண்டு.