பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


மனம் ஒரு நாய் போல, சீ என்றல் ஒடிப் போகும். தோதோ' என்ருல் ஓடிவரும். தன்னை அடித்த கல்லக் கூட. சில சமயங்களில் ஒடிப் போய் முகர்ந்து பார்த்து விட்டு, திரும்பவும் ஒடும். அது நன்றியுள்ளதாகவும் இருக்கும். நல்ல பாம்பு விஷம்போல நஞ்சு பாய்ந்ததாகவும் இருக்கும். அப்படித்தான் மனம் இருக்கிறது என்பார்கள். - - - எவ்வளவு தண்ணிர் வந்து பாய்ந்து கலந்து கொண்டா லும், கடல் அமைதி கொள்வதில்லை என்பார்கள். - எவ்வளவு பொருட்களக் கொண்டு வந்து போட்டாலும் நெருப்பு, வருந்துவதில்லை. வந்ததையெல்லாம் சாம்பலாக்கி விட்டுப், புகைந்து கொள்கிறது. அதுபோலவே மனமும் எவ்வளவு வந்தாலும். எத்தனை .ெ ப்ருலும். எப்பொழுது பெற்ருலும் திருப்தி அடைந்து விடுவதில்லே. -- ஒரு அரசனுக்கு ஏழுலோகத்தையும் ஆள்வதற்குரிய அதிகாரத்தைக் கொடுத்தபிறகும், அவன் கவலையோடு இருந் தாகும். காரணம் கேட்டதற்கு, இன்னும் ஒரு லோகம் இருந்திருக்கக் கூடாதா? ஏழு தானே இருக்கிறது என்ரு ம்ை அவன். ஒரு இளவரசிக்கு மயிற்பீலியால் மெத்தைகள் ஏழு-எட்டு கொண்டுவந்து பாங்காக அமைத்து, அதில் உறங்கச் சொன்ன போது, அவள் முகத்தை சுளித்துக் கொண்டு படுத்திருந் தாளாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு, ஏதோ ஒன்று உறுத்துவது போலத் தெரிகிறது என்ருளாம். மென்மையான மயிற்பீலியே உடம்பை உறுத்துகிறது என்ருல், அவள் மண மும் உடலும் எப்படிப்பட்டது என்பதைப் பார்த் தீர்களா? இந்த மனித மனம் எப்படிப்பட்டது தெரியுமா! 'இல்லாத பொருளுக்கு ஏங்கும். அதுவே அருகே இருந்துவிட்டாலோ அக்கறையின்றித் தூங்கும்.' நீ. ம. -2