பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 இந்த மனத்தில் தான் மகிழ்ச்சியை நிறைத் துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியும் மனதில்தான் இருக்கிறது என்று நமக்குப் புரிந்து விட்டது. பின் என்ன செய்யப் போகிருேம்? 'முள்ளு முனையிலே மூனு குளம் வெட்டினேன். இரண்டு குளம் பாழ். ஒன்றில் தண்ணியே இல்லை' என்று நாடோடிப் பாடல் ஒன்று பாடுகிறது. இந்த மனத்தின் பெருமையும் இப்படித் தான் இருக்கிறது. இமயமலைக்குப் போனல் என்ன, இந்த உலகத்தின் எந்த மூலைக்குத்தான் ஏகினலும் என்ன? கூடவே வருகின்ற மனத்தையும், அதன் குணத்தையும் பிரிந்துவிடத்தான் முடியுமா? அல்லது முறித்து விடத்தான் முடியுமா? "ஒரு நாளேக்கு உணவை ஒழித்து விடு என்ருல் அதுவும் முடியாது. இரு நாளே ச்கு வேண்டியதை ஏற்றுக் கொள் என் ருல், அதுவும் ஏலாது. அதல்ை துன்பம் தருகின்ற வயிறே! உன்ைேடு வாழ்தல், அரிது என்று அவ்வைப். பாட்டி வயிற்றை நோக்கிப் பாடினளே. அப்படித்தான் மனத்துடனும் நாம் வாழ வேண்டியிருக்கிறது. திருப்தி அடையாத தீக்குணம் கொண்ட மனதிலேதான், மகிழ்ச்சி ஒளிந்து கொண்டிருக்கிறது. சேற்றிலே செந்தாமரை மாட்டின் வயிற்றிலே கோரோசனை. காட்டிலே சந்தனம், கழனியிலே நெல்மணிகள் என்பவற்றைப் போல, இந்த மாயா ஜால மனத்திலிருந்துதான் நாம் மகிழ்ச்சியைப் பெற வேண்டியிருக்கிறது. ஆளுல், உடலில் வரும் நோய்களைவிட, மனத்திற்குத் தான் நிறைய உண்டு; என்று ஒரு மேல் நாட்டறிஞர் கூறியது போல, மைைதத் தான் நாம் மாண்புடன் போற்றிக் கவனித்துக்கொள்ள வேண்டும்.