பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 உலகில் இரவும் பகலும் போல, சாலைகளில் மேடும் பள்ளமும் போல, வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது இயற்கை தானே. வெற்றியை வர ேவ ற் ப து போல, வந்து போகும் தோல்வியையும் ஏற்றுக் கொள்கின்ற இதயம் படைத்தவர் களே வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்கின்ருர்கள், மகிழ்ச்சியாக வாழ, மனதை படிப்பித்துக்கொண்டு, பக்குவப்படுத்தி கொண்டு விட வேண்டும். நம்பிக்கையுடன் தீர்மானிப்பது, சுயக்கட்டுப்பாடு, ஒழுங்கான முயற்சி, உண்மையான உழைப்பு, விடா முயற்சி இவைகள் மனிதனுக்குள்ளே விளைந்திரு க்கும் மாமணிப் பழக்கங்கள் ஆகும். இவற்றை வளர்த்துக் கொள்வோம். தோல்வி வரட்டுமே, தாங்கிக் கொள்வோம். தூக்கி யெறிய வேண்டிய இடத்தில் எறிந்து விட்டு வரவேண்டிய வெற்றியை வாங்கிக் கொள்வோம். இந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் மகிழ்ச்சி எங்கே போகும் ? வாலாட்டிக்கொண்டு திரிகின்ற அன்பார்ந்த நாய்க் குட்டியைப்போல மகிழ்ச்சியும் நம்முடனே வரும். வளரும். ஒவ்வொரு நிமிடத்தையும் உவப்பானதாக ஆக்கி விடும். ஆகவே, தொடக்கம் என்கிற தோல்வியைப் பற்றிக் கவலை எதற்கு ? நல்ல புகழுக்கும். நன்மை தரும் செல்வ மேம்பாட்டுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் உழையுங்கள்! வெற்றிவரும். புகழைத் தரும்; மகிழ்ச்சியும் உலவும், குலவும். அதுதானே நமது விருப்பமும் வெற்றியும் ! நீ. ம.-4