பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மனிதனது உடலைத்தான் பார்க்கிருேம். அதன் உறுப்புக் களைப் பார்க்கிருேம் அதிலிருந்து கிளம்பிவரும் செயல்களைப் பார்க்கிருேம். அத்துடன் நமது பார்வையும் நுணுக்கமும் நிறைவுபெற்று விடுகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது அப்படித்தான் நமக்குத் தோன்றும். ஆகுல்..மனித உடல் என்பதோ மாபெரும் சரித்திரத்தை போன்று அதிசியங்களும் அற்புதங்களும், திடுக்கிடச் செய்யும் திருப்பங் களும் ஏக்கங்களும் நிறைந்த ஒன்ருகும். உலகையும், உடலையும் ஒன்ருக இணைத்துக் காட்டுவார்கள். பெரியோர்கள். நிலம், நீர், காற்று, நெருப்பு, என்பதாக அமைத்துக் காட்டுவார்கள். உலகில் உள்ள தன்மை போலவே ஒரு மனித உடலிலும் இந்நான்கு குணங்கள் அமைந்திருக்கின்றன. நிலம் என்பதன் தன்மைபோல உடல் நீர் ஒட்டம் போல உணர்வுகள் காற்றுநீர் போல மன நினைவுகள் Qālū57&# 35ir sold (Spiritual Power) என்பதாக நெருப்பு இந்தக் குணங்களை நாம் ஒரு மெழுகுவர்த்தியை சான் ருக வைத்துப் புரிந்து கொள்ளலாம். ஒரு மெழுகுவர்த்தி என்பது நமது உடல் போன்றதாகும். நாம் தெய்வீகச் சிந்தனையை அடையும் பொருட்டு, நமது உள்ளுக்குள்ளே மேம்பாடுள்ள நெருப்பு எரிந்து கொண்டிருக் கிறது, மெழுகுவர்த்தியும் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரிய நினைவுகள் எனும் காற்று (Gas) வெளிவந்து கொண்டிருக்கிறது. உணர்வுகள் எனும் உச்சக் கட்டத்தில் தொடர்ச்சியாக மெழுகுவர்த்தி இளகிக்கரைந்து கொண்டே வருகிறது.இறுதியில் அது எரிந்து உருகி, கரைந்து மறைந்து விடுகிறது.