பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

வலிமையான உடலில் தான் வலிமையான மனம் வளரும். வாழும் என்பார்கள்.

வலிமையான உடலுக்கு அடிப்படை தேவை உடல் உழைப்பு.

வியர்வை சிந்தும் வேலை.உயர்வைத் தரும் உடற்பயிற்சி.

இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டு விட்டால், 'மனிதன்' என்ற முகத்தில் பொலிவும் வலிவும் என்ற தெளிவு வந்துவிடும்.

இரண்டையும் ஏக காலத்தில் வழங்குவது விளையாட்டுக்கள் தான்.

விளையாட்டானது விருப்பமாக செயல் படக்கூடிய ஒரு சிறப்பான காரியமாகும்.

விளையாட்டு ஆடுவோரின் மனதை மகிழ்விச்கிறது உறுப்புச்சளை உற்சாகமாக இயக்குகிறது. உணர்வுகளிலே தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

நேரத்தைப் பயனுள்ள முறையிலே நிறைவ செய்கிறது. நெஞ்சிலோ புதுத்தெம்பினை ஊட்டுகிறது.

இதனால் என்ன பயன் வந்து விடப் போகிறது என்ற கேள்வி எழுவதும் புரிகிறது.

விளையாடுபவர்கள் அதிகமான பிராணவாயுவை. விளையாடும் போது சுவாசிக்க நேரிடுகிறது. ஆழ்ந்து மூச்சிழுக்கும்போது நுரையீரல் நல்ல காற்றை நிறையப் பெற்றுக் கொள்கிறது.

இதனால் இரத்தம் தூய்மையடைகிறது. இரத்த ஒட்டம் ஆற்றடலுன் விரைவும் பெறுகிறது.

இப்படி ஏற்படுகின்ற நிகழ்ச்சியினால், வேண்டாத கழிவுப் பொருட்களான வியர்வை, லேச்டிக் ஆசீட், கரிமில