பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

வாயு, போன்றவை, விரைந்து உடலைவிட்டு வெளியேறுகின்றன.

தேகம் தூய்மையடைகிறது. முகத்திலே அழகு விளைகிறது. உடலில் ஓர் அற்புத் தோற்றம் உண்டாகிறது.

தனது உடல் நன்றக உருவாவதை எந்த மனிதனும், எந்த மங்கையும் வெறுப்பதில்லை.

இருக்கின்ற தனது அழகினை இழந்திட யாரும் விரைந்து ஓடுவதில்லை. ஒப்புக்கொள்வதுமில்லை.

வந்த அழகைக் காத்துக் கொள்ளவும். வளையம் வருகின்ற வலிமையை விருத்தி செய்து கொள்ளவுமே மனிதர்கள் விரும்புவார்கள். அப்படித்தான் விரும்ப வேண்டும். அது தான் நியாயம். அவர்கள் தான் மனிதர்கள்.

அட்பொழுது தான் உடலின் சக்தியை உபயோகமற்ற முறையில் வீணாக்கிட யாருமே முனைய மாட்டார்கள், முன்வ ரவம் மாட்டசர்கள். அதுதான் அறிவார்ந்த மக்களின் பண்பாடும் ஆகும்.

எங்கே உடல் கட்டுப்பாடு வந்து விடுகிறதோ அங்கே சச்சியை செலவு செய்ய விரும்பாத மனக்கட்டுப்பாடும் வந்து விடுகிறது.

விளையாட்டிலே ஒர் எல்லை உண்டு. இலக்கு உண்டு. விதிமுறைகள் உண்டு. விளையாடும் நெறிமுறைகள், எழுதாத மரபுகள், நல்ல நலம் காக்கும் பழக்கவழக்கங்கள். திருப்தி கொள்ளத்தக்க சூழ்நிலைள். தீமைகளைத் தவிர்க்கும் புதிய புதிய சந்தtட்டங்கள். பிறருக்கு உதவும் பண்பான செயல்கள் பரிவுகள், புரியாத உறவுகள் அத்தனையும் உண்டு.

அதுபோலவே, இருக்கின்ற இளமையை இணைத்து விடாமல், சட்டிக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற

சானமும் குறிக்கோளும் அந்த விளையாட்டிலும் உண்டு.