பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34


விளையாட்டின் நோக்கம் எவ்வாறு கற்பிக்கப்படுகிறதோ அப்படித்தான் அந்த விளைவு இருக்கும் என்பது உண்மை.

விளையாடியும் வேலை செய்தும் களைத்த உடல், வளர்ந்த உடல் நோக்கத்தில் நல்லதாக வளர்க்கப்பட்டிருந்தால் நனேவுகளும் நல்லதாகத்தான் வரும். எண்ணிச் செயல்படும்.

திடல் விளையாட்டில களத்த உடல், உடல் விளையாட்டை நினைத்துப் பார்க்காத பேராண்மையை உண்டாக்கிவிடும். இளமை இன்பத்தை நினைக்கின்ற கிளர்ச்சியூட்டும உடலுறவில் வீணுக்கிவிட மனமானது இடம் கொடுத்து விடாது.

'விந்து விட்டவன் நொந்து கெட்டான்' என்ற பழமொழியை அடிக்கடி நினைவூட்டும், தானும் நலிந்து, தன் குடும்பமும் நலிந்திட விளையாட்டு மனமானது என்றும் அது துணை போகாது.

விகளயாட்டு உணர்வு என்பது இயற்கையான மருந்து வலிமைக்கு விருந்து. விளையாட்டில் ஈடுபடுவது இயற்கை யாகத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் இயல்பான நெறிமுறை.

இந்த உடல்கட்டுப்பாட்டையும் மனக் கட்டுப்பாட்டையும் உயர்த்திக் கொண்டு உயர்ந்தால் குடும்பக் கட்டுப்பாடும் தானகவே வந்துவிடும்

விளையாட்டு வலிமையுடன் வாழ வழிகாட்டுகின்றன . விளையாட்டை நீங்களும்பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அது தான் சீரான வழி. சிக்கனமான வழி. சிறப்பான வழியுங்கூடா. இப்படி சிந்தித்தால், செயல் பட்டால், நமது நாடு நிச்சயம் மேலோங்கும் நாட்டுமக்கள் நலமுடன் வாழ்வார்கள். அளவான குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் அல்லவா !