பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. வலிமையே வாழ்வு

சாய்ந்த எழுத்துக்கள்தடித்த எழுத்துக்கள்சாய்ந்த எழுத்துக்கள்'''தடித்த எழுத்துக்கள்'

'வலிமையே வாழ்வு. வலிமையற்ற பலஹீனம் மரணம்' என்று வலியுறுத்திக் கூறுவார் வீரத் துறவி விவேகாநந்த அடிகள்,

பேலிமை என்றால் என்ன?

நல்ல உடல் அமைப்புடன் விளங்குவதா?

விளையாட்டுக்களில் ஈடுபடுகின்ற திறத்துடன் திகழ்வதா?

"நல்ல கட்டு மஸ்தான தேகத்துடன் இருப்பதா?

“ நான் எந்த நோயும் இல்லாமல் இநக்கிறேன்' என்பதா?

நான் நலத்துடன் வாழ்கிறேன் என்பதா?

திறம் மிகுந்த வலிமை என்பது மேலே கூறிய எல்லா நிலைகளுக்கும் மேம்பட்ட ஓர் இனிய நிலை.

ஆக, நாம் வலிமை என்றால் என்ன வென்று விளக்கமுறத் தெரிந்து கொண்டாக வேண்டும்.

“உடல் திறனில் நிலையான வலிமை என்பது, ஒரு காரியத்தை சீராகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கக் கூடிய நீ.வா-3