பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

தேக நிலை. அதாவது நோயணுகாத நலமார்ந்த தேக நிலை. நல்ல நெஞ்ஈரமும், நுண் திறமும் வாய்ந்த சக்தி மிகுந்த தசைகளையும் எலும்புப் பகுதிகளையும் உடைய தேகம்

இப்படியெல்லாம் விளக்கம் கூறுகின்றார்கள்.

உடல் வலிமை என்பது இயற்கையாக வந்துவிடுவதில்லை. இந்தத் தகுதி நிலை உடற்பயிற்சியால் மட்டுமே பெறக் கூடிய பரிசாகும்.

இந்த வலிமை உடல் வலிமை என்று மட்டும் நாம் தனி மைப் படுத்தி விடக் கூடாது.. உடல் வலிமை என்பது நான்கு வலிமைகளுள் ஒரு வலிமை தான்.

1. உடல் வலிமை (Physical Fitness)

2. மன வலிமை (Mental Fitness)

3,உணர்வு வலிமை (Emotional Fitness)

4. உடணுறை வலிமை (Social Fitness)

உடலால் வலிமை படையவராக இருந்தால், மட்டும் போதாது. அதனாலே அவர் சிறந்த செயலாற்றல் உள்ளவர், சந்தோஷமாக இருக்கிருர், நுண் திறன்களில் நேர்த்தியாக விளங்குகிறார் என்று சொல்லிவிட முடியாது.

உடலால் வலிமை இல்லாதவராக ஒருவர் இருந்தால், அவருக்கு அதிக ஆற்றல் இருக்காது; அன்றாடம் வேலை களைக் களைப்பின்றி தொடர்ந்து செய்திடும் சக்தி அவரிடம் இருக்காது. உணர்வு பூர்வமாக காரியங்களை உத்வேகத்துடன் பணியாற்ற முடியாதுஅதே நேரத்தில் அடிக்கடி நோய்க்கு ஆளாகும் அவதியும் நேர்ந்திடும் என்று நாம் திட்டவட்ட மாகக் கூறாம்.