பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

வற்றை செய்து கொள்ளக் கூட, வேலையாட்களைத் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

உடலுக்கு வேண்டிய திறமை, முயற்சி, பலம், எல்லா வற்றையும் சேர்ப்பதற்குப் பதிலாக, தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நமது மூதாதையர்கள் முழு பலத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை சொல்லி மகிழும் அளவுக்கு, நம் காலத்தவர்கள் உடலில் பலமின்மையையும், பலஹீனத்தையும் நலிவையும் நோய்களையும் சுமந்து வாழத் தொடங்கி விட்டார்கள்.

கற்கால மக்கள், அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்த பொற் கால மக்கள் வரை, தங்கள் கடின உழைப்பினால் அமைந்த கட்டான உடலோடு களிப்புடன் வாழ்ந்தார்கள்.

நாம் வாழும் காலமோ, உடலை மறந்திருக்கும் காலம். ஆனாலும் அந்த அற்புத உடலுக்குள். அமைந்திருக்கின்ற மனத்தின் வலிமையையும் அதன் ஆற்றலையும் நுணுக்கங் களையும்நம்பியே வாழ்கிறோம்.

'நாற்பது வயதில் தான் நல்ல வாழ்க்கையே ஆரம்பிக் கிறது' என்ற பழமொழி பொய்யாகிப் போய் விட்டது.

'முப்பது வயதிற்குள்ளேயே எல்லாமே முடிந்து விட்டது” என்ற முடிவுக்கு மக்கள் வரத் தொடங்கியது தான் காரணம்.

ஏனென்றால், முப்பது வயதிற்குள்ளேயே பலப் பல நோய் களுக்கு ஆளாகிப் போகின்ற மக்களைச் சுமந்திருக்கும் கால மாகப் போய்விட்டது.

மக்கள் கண்ட தையெல்லாம் கண்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தால் ஏற்படுகின்ற ஊளைச் சதை பெருக்கம், பெருத்த தொந்தி, அதனால் ஏற்படுகின்ற பின்புற