பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

வலிமையுடன் வாழ்பவர்களுக்கும், வலிமையின்றி நடமாடுபவர்களுக்கும். என்ன வித்தியாசம்? அப்படி என்ன வேறுபாடு என்று கேட்பவர்களுக்காக இந்தப் பட்டியலைத் தருகிறோம்.

4. பலமும் பலஹீனமும்

ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு பலசாலியும் பலம் குறைந்தவரும் செய்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்

பலசாலியும் அப்பணியை செய்து முடிச்கிறார். பலஹீன வாதியும் செய்து முடித்து விடுகிறார். இதில் இரண்டுவிதக் கருத்துக்கு இடமேயில்லை.

ஆனால், செய்கின்ற செயல் முறையில், நடை றையில், தொழில் முறையில் தான் வித்தியாசம் இருக்கிறது.

பலம் உள்ளவன் ஒரு சாதாரண வேலையை ஆற்றும் போது

1. வேலையை விரைவாகச் செய்து முடிக்கிறான்.

2. அவனது ஆற்றல் மிகுதிப்படுகிறது.

3. அவனது இரத்த அழுத்தம் குறைகிறது.

4. நாடித்துடிப்பு சீராகத் தொடர்கிறது.

5. இதயத்தின் வேலை தடுமாற்றமின் றி, சிறப்பாகத்தொடர்கிறது.

6. அவனுக்குப் பதட்டமோ மன சலனமோ, குழப்ப உணர்வுகளோ ஏற்படுவதில்லை. குறைவாகவே இருக்கிறது.