பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56

அளவு, களைப்பின்றி தொடர்ந்து காரியம் அற்றிட உதவுகின்ற தசைகளின் உழைப்பாற்றலைக்தான், நீத்துழைக்கும் ஆற்றல் என்று விஞ்ஞானிகள் விவரித்துரைக்கின்றார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய தசையின் உலழப்பாற்றல் கட்டாயமாகத் தேவைப் படுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுந்தானா ! சாதாரண மக்களுக்கும் தேவையில்லையா என்றால் நிச்சயமாக வேண்டும்.

'வாழ்க்கையில் எல்லோரையம்போல் இருந்துவிட்டுப் போகிறேன், உண்டு விட்டு சாகிரேன்' என்ர் வேதாந்தம் பேசுபவர்களுக்கு இது தேவையில்லை.

'வாழ்ந்து முடிவதற்குள். மற்றவர்கள் மெச்சுவதுபோல் சாதனை செய்ய விார்புறோம்' என்று உண்மையாகவே உளமார விரும்பும் மக்களுக்கெல்லாம் இத்தகைய ஆற்றல் தேவைப் படுகிறது.

ஒவ்வொரு நாளையும் அவரது பிறந்த நாள் விழாவைப் போல கொண்டாட வேண்டும். இது எப்படி, (மமயம் ? எப்பொழுது முடியும் ? அது வலிமையாக உழைக்கும் தசை களை வளர்த்திருப்பவர்களால்தான் முடியும்.

இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்து வளர்த்துக் கொண்டு வாழ்வது அறிவுடையோர்க்கு அழகாகும்.

உடல் நெகிழுந்தன்மை (Flexibility)

உடல் முழுதும் உரம் வாய்ந்த எலும்புகளினால் உருவாக. கப்பட்டிருக்கின்றன. அவற்றிலே நீண்ட எலும்பு, குட்டை எலும்பு, தட்டை எலும்பு என்று பல வகைகள் உள்ளன,