பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 2 கண்பார்த்தவுடன் கை செயல்படுகின்ற கண்-கை செய லாற்றல், கண்பார்த்தவுடன் கால் இயங்குகின்ற கண் கால் ஒருங்கிணைப்பு செயல்கள் எல்லாம் விளையாட்டுக்களில் அதிகமாக நிகழ்வனவாகும் குறிப்பாக டென்னிஸ் கிரிக்கெட், வலைப்பந்தாட்டம், கூடைப் பத்காட்டம், வளைகோல் பந்தாட்ட ம் போன்ற ஆட்டங்களில் அதிகமாக நிகழ்வனவாகும். உ) நினைவுக்கேற்ற உடலியக்கம் ஒரு மனிதர் சூழ்நிலைக்கேற்ப அசைகிறார், இயங்குகிறார் என்பது சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும். o அதே சமயத்தில் , ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் போது, தனது உடல்நிலையை விரைவாகவும் சாமர்த்தியமாகவும் திறன் நுணுக்கத்துடன் மாற்றி பயன்படுத்தி விட்டு, மீண்டும் திற நிலைக்கு வந்துவிடுகின்ற ஆற்றலே எளிதான உடலியக்க மாகும். அதாவது, நினைவுக்கேற்றபடி, தடையேதும் இல்லாமல் டைடல்நிலையை மாற்றி இடம் மாறிக் கொள்கின்ற எழில்திறன் இது . குதிகச்சண்டை, மல்யுத்தம், கூடைப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கால்பந்தாட்டம் போறை விளை பாட்டுக்களில் இப்படிப்பட்ட உடலியக்கங்கள் அடிக்கடி ஏற்படக் கூடிய தன்மைகளில் அமைந்திருக்கின்றன. இந்த உடலியக்கத்தில் அதிகம் தேர்ந்த ஆட்டக்காரர் களே அதிகமான விளையாட்டுத் திறன் நுணுக்கங்களில்