பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சிறப்படைந்து, பார்வையாளர்கள் மத்தியிலே மிகவும் பிரபல மாணவர்களாக விளங்குகின்றார்கள். - za } sr#lit @ 3 usò ġi spio (Reaction Time) ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, குறைந்த நேரத்திற். குள் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது தான் எதிரி செயல் திறம் என்று அழைக்கப்படுகிறது. தன் முகத்தில் ஒருவர் குத்த முயற்சிக்கிறார் என்று. உணர்ந்து கொண்டவுடனேயே, தாக்குவோரின் கை தனது முகத்தைத் தாக்கிவிடாமல், சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்ளும் சாகசத்திறன் தான் எதிர் செயல் திறமாகும். துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே நொடிக்குள்ளே அந்த நேரத்தின் ஒரு பகுதி அளவிலே, புறப்பட்டு ஓடிப் போகிறாறே, அந்த அற்புதச் செயல்தான் எதிர்ச் செயல். திறமாகும். குத்துச்சண்டைப் போட்டியில், கக்திச் சண்டையில் கராத்தே போட்டியில் இந்த எதிர்ச் செயல்திறம் மிக அதிக மாகத் தேவைப்படுகிறது. நீச்சல் போட்டியில் விரைவோட்டப் போட்டியில் உடனே கிளம்பிக் சதிக்கவும், ஒடவும் கூடிய ஆற்றலே. எதிர்ச் செயல் திறமாகும். ஒருவர் எவ்வளவு வலிமையாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, மேலே விளக்கிய ஆறு குணாதிசயங்ளு மாகிய திறன்கள் தான் சான்றுகளாக விளங்குகின்றன.