பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இப்பொழுது, இந்த மூன்று விதமான நேரங்களை, சற்று விளக்கமாகக காண்போம். அ) வேலைக்குத் தொடர்பான நேரம் நீங்கள் மாணவராக இருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர், பள்ளிச் சீருடையை அணிகின்றீர்கள், பள்ளிக்குச் சென்றிட பயணம் செய்கின்றீர் கள். பள்ளி விட்டு வந்ததும், வீட்டுக் கணக்குகளை செய்தோ அல்லது வீட்டுப் பாடங்களைப் படித்தோ நேரத்தைக் கழிக் கின்றீர்கள். பதவியிலோ அல்லது உழைப்பாளராகவோ இருந்தாலும், இப்படித் தாங்கள் பணியாற்றும் வேலைக்கேற்ப செய்கின்ற காரியங்களைத் தான் வேலைக்குத் தொடர்பாகக் காரியம் செய்கிறோம் என்பது பொருள் இது ஒருவரின் தவிர்க்க முடியாத கடமையாகும். ஆ) அவசியமான கடமை நேரம் இது அன்றாடக் கடமைகளான இன்றியமையாத காரியங் களில் அத்யாவசியமான பணிகளில் ஈடுபடும் நேரமாகும். காலையில் துயில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்தல், பல் துலக்குதல், குளித்தல், துணி துவைத்தல், சிற்றுண்டி உட்கொள்ளுதல், இப்படியாகத் தூங்குதல் போன்றவை எல்லாம் பிறர் சொல்லிச் செய்யாமலே தாமே செய்யக் கூடிய முக்கியமான காரியங்களாகும். இப்படியாக நேரம் கழிவது இயற்கையான முறையாகும். இவை அவசியமான கடமை நேரமாகும். நீ. வா. -5