பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ) ஓய்வு நேரம். அலுவலகத்தில் இருப்பது அல்லது பள்ளியில் படிப்பது போன்ற பணி நேரம் போக, வேலைக்குத் தொடர்பான காரியங்களையோ அல்லது இன்றியமையாத கடமைகளை ஆற்றிய நேரம் போக, எஞ்சி நிற்பது தான் ஓய்வு நேரம். இப்படிப்பட்ட ஓய்வு நேரத்தை நீங்கள் எப்படிக் கழிக் கின்றீர்கள் என்பதில் தான் உங்கள் வாழ்க்கை முறையும் ஒழுக்க நெறியும் அமைந்திருக்கிறது. இந்த மீதி நேரத்தை ஒய்வு நேரம் என்று அழைப்பது உண்மைதான் என்றாலும், வேலையில்லாத நேரத்தில் செய் கின்ற காரியங்களை யெல்லாம் ஒய்வு தேரக் கரீரியங்கள் என்று தவறுதலாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வேலைக்குத் தொடர்பான நேரத்தையும், அவசியமான கடமை நேரத்தையும், ஒய்வு நேரம் என்றே பல ர் எண்ணி, பேசி சாதிக்கின்றார்கள். அவர்களின் பேச்சானது சாமர்த்திய மாக அமையுமே தவிர, எந்த சக்தியையும் தந்து விடப் போவ தில்லை. உதவியையும் செய்து விடப் போவதில்லை. ஒய்வு நேரம் என்பது உண்மையாகவே எது வென்றால், கடமைகளைச் செய்கின்ற நேரம் அல்ல. நீங்களாகவே விரும்புகின்ற ஒரு செயலைத் தேர்ந்தெடுத்து, அதில் மன மார ஈடுபடுவதுதான். எது ஓய்வு நேரம் ? துரங்குவதற்காக 8 மணி நேரம்; மூன்று வேளை உண வென்றால், உண்பதற்காக எடுத்துக் கொள்ளும் 1 மணி நேரம்; அலுவலகப் பணியாக 8 மணி நேரம்; அலுவலகம் செல்லத்