பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தயாராக, உடை உடுக்க, பயணம்செல்ல போன்ற காரியங் களுக்கு 8 மணி நேரம். என்பதாக சராசரி மனிதன் ஒருவன் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்தைக் கழிக்கிறான். இவையெல்லாம் போக 4 மணி நேரம் அல்லது ஏறத்தாழ 5 மணி நேரம் மிஞ்சுகிறதே...அது தான் விடுபட்ட நேரம், அது தான் ஒய்வு என்பதாகும். இந்த ஓய்வு நேரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்து கின்றீர்கள் 2 1) விளையாட்டுக்களில் ஈடுபட்டா ? 2) ரேடியோ கேட்டு அல்லது டெலிவிஷன் அல்லது சினிமா பார்த்தா ?. 8) உ ட் கார் ந் து விளையாடுகின்ற சீட்டாட்டம், சதுரங்கம் போன்றவற்றில் ஈடுபட்டா ?... 4) பொது விஷயங்கள் அல்லது அரசியலை பற்றி அல்லது மற்ற மனிதர்களைப் பற்றி விமர்சித்தா ?. 5) எதுவுமே செய்யாமல் சும்மா' இருந்தா ?. இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும் ? வாழ்க்கையில் பெரிய அற்புதம் ஏதாவது ஏற்பட்ட லொழிய, இப்படித் தான் நீங்கள் இருந்தாக வேண்டும். முற்காலத்தில், மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்குக் குறையாமல் உழைக்க வேண்டியிருந்தது. அதுவும் 6 நாட்கள் உழைக்க வேண்டியதாயிற்று.