பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O காலம் மாற மாற, எந்திரங்கள் சமுதாயத்தில் இடம் பிடித்துக் கொள்ள, வாழ்க்கை முறையும் உழைப்பு முறையும் மாற்றம் பெறத் தொடங்கின. தற்காலத்தில் 8 மணி நேரம் அதுவும் 5 நாட்கள் வேலை என்ற அமைப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில், இன்னும் ஓய்வு நேரம் அதிகமாகலாம். அப்படி வளர்ந்திருக்கும் விஞ்ஞான யுகம் நம்மை வளர்த்து விட்டிருக் கிறது. அதனால், நாம் இந்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக, பலம் தருவதாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித் தனமாகும். நல்ல உடல் உழைப்புள்ளவர்கள் உட்கார்ந்து தான் ஓய்வு பெற வேண்டும் என் பதல்ல... * தோட்ட வேலை மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உடலுக்குப் பயிற்சியைக் கொடுக்கும். தேவைக்கு வருமானத் தையும் வழங்கும். ஆனால், ஒருவருக்குப் பிடித்த ஒரு தொழில் மற்றவருக்கு உகந்ததாக அமையாது. இவ்வாறு உதவுகின்ற ஒய்வு நேரக் காரியங்களை, நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1) அமர்ந்திருந்து செயல்படல் (Passive) 2) உடல் உழைப்புடன் செயல்படல் (Active) அமர்ந்திருந்து பொழுது போக்குதல் : சினிமாவுக்குச் செல்வது; அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் போய் பார்ப்பது; அல்லது வீட்டில் இருந்து சீட்டாடு நல், புத்தகம் படித்தல் போன்றவற்றில் ஈடுபடுதல் .