பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 உடல் உழைத்து செயல் படல் : கிரிக்கெட், டென்னிஸ், போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுதல்; கூடாரம் அமைத்துத் தங்குதல், மீன் பிடித்தல் போன்ற உல்லாச காரியங்களில் ஈடுபடுதல், மற்றும் தோட்ட வேலை, இசை நாடகம் முதலியவற்றில் ஈடுபடுதல், அல்லது மெது ஒட்டம், ஒட்டம், உடற்பயிற்சி செய்தல், இவ்வாறு ஒய்வு நேர காரியங்களில் ஈடுபடுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைப் பொறுத்த தாகும். இது ஆளுக்கு ஆள் மாறுபடும். இது தனிப்பட்டோர் தனக்கு உகந்ததை, பிடித்ததைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்திருக்கிறது. இப்படிப்பட்டத் தேர்ந்தெடுப்பு ஒரு சிலருக்குப் பெற்றோர் களின் கட்டளையால் அமைவதும் உண்டு. வேறு சிலருக்கு நண்பர்களின் வற்புறுத்தலினால் இணங்கி ஏற்பதும் உண்டு. என்றாலும், இது விருப்பமான செயல்களின் பிரதிபலிப்பாகவே ஓய்வு நேரம் அமைகிறது. அப்படித்தான் அமைய வேண்டும். இளமையும் ஓய்வு நேரமும் : ஒய்வு நேரத்தில் உடலை இயக்கும் காரியங்களில் ஈடுபடு வோரே, மிகுந்த உற்சாகமாக வாழ்கின்றார்கள். உடல் நலத்துடன் திகழ்கின்றார்கள். எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளோடு, ஏற்ற செயல்களைத் திட்டமிட்டு, திறம்படப் பின்பற்றி வாழ்க்கை இன்பத்தை முழுதுமாக அனுபவிக் கின்றார்கள். இந்த அற்புதமான நிலைமையை உணர்ந்த அறிவாணி கள், இத்தகைய பழக்க வழக்கங்களை இளமையிலேயே