பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாணவர்க்குக் கற்பிக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள். அந்த முற்போக்கு எண்ணங்களின் முடிவாகத்தான், பள்ளி களில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் உடற் கல்வியைக் கட்டாயப் பாடமாக்கி, விளையாட்டுக்களில் கட்டாயமாக ஈடுபடும் சூழ்நிலையை அமைத்துத் தந்தார்கள். அவர்கள் ஆக்கித் தந்த உடற்கல்வி, இளைஞர்களை எப்படி மாற்ற முனைந்த து என்று நீங்களும் அறிந்து கொள் ளுங்கள். உடற்கல் வியின் பயன்கள் 1. உடற்கல்வியானது உடலை வலிமையோடு வளர்த்து, தொடர்ந்து பாதுகாத்து வரும் தூய நெறிகளையும், துல்லிய முறைகளையும் இளைஞர்களுக்குக் கற்றுத் தருகிறது. 2. நமது உடலின் அமைப்பு என்ன? எப்படி இயக்க வேண்டும்? என்னென்ன பயிற்சிகள் செய்தால், தசைகள் வளரும், எலும்புகள் உறுதி பெறும், நுரையீரல் எழுச்சி பெறும், இதயம் பூரிப்புடன் செயல்படும், உள்ளம் திண்மை பெறும் , உடலுறுப்பு ஸ் உயர்ந்த வலிமையை அடையும் என்றெல்லாம் கற்பித்துத் தருகிறது உடற்கல்வி, 3. சமுதாயத்தில் ஒருவரோடு ஒருவர் சுமுகமாகப் பழகிட விளையாட்டுக்கள் உதவுகின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உள்ளப் பாங்கினை வளர்க்கின்றன. ஆகவே, விளையாட்டுக்கள் தாம் சமுதாயத்தின் மேம்பாட் டுக்கு உதவுகின்றன என்ற உண் ைமயை அனுபவ பூர்வ மாகக் கற்றுத் தருகிறது. 4. வாழ்க்கையில் உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்படுவது இயல்பே. அப்படிப்பட்ட சூழ்நிலை