பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 களை அறிவார்த்தமான முறையில் அணுகி, ஆச்சரியப் படத் தக்க அளவில் வெற்றி பெறுகின்ற வியூ க மனப்பாங்கினை விளையாட்டுக்களில் ஈடுபட வைத்து, அதன் மூலம் வாழ்க்கை அனுபவங்களை எளிதாக வழங்கித் தெளிவாக்கு கிறது உடற்கல்வி. 5. இன்றைய சமுதாய அமைப்புக்கு வலிமையான தேகம் தான் மிக மிக அவசியம் என்ற கருத்தை வற்புறுத்தி, வலிமையான, நோயற்ற தேகத்திற்கு விளையாட்டுக்களே உதவுகின்றன என்ற உண்மையை உள்ளத்தில் பதித்து விடு கிறது. ஒவ்வொரு மனிதரும் தாங்கள் சந்தோஷமாக வாழ்வதைத் தான் விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் வெற்றியும் தோல்வியும், மகிழ்ச்சியும் துன்பமும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கை முறை மூலமாகவே அமைகிறது. இந்த வாழ்க்கை முறை உங்களால் தான் அமைகிறது. இடங்களால் தான் பின்பற்றப்படுகிறது. நீங்களே தேர்ந்தெடுக் கும் வாழ்க்கைமுறை, உங்களுக்காக உங்கள் வருங்காலத் தையே நிர்ணயிக்கிறது. உங்கள் உடல் பலத்திற்கேற்ற காரியங்கள் தாம், உங்கள் தேகத்தை சக்தியுள்ளதாக மாற்றுகின்றன. அதன் வழியாகவே, நல்ல மனம், நல்ல உடல், நல்ல வாழ்க்கை அமைகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? எப்படி அமைய வேண்டும் என்று