பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வலிமையுடன் வாழ சில குறிப்புகள் வலிமையான தேகத்தைப்பெற எத்தனையோ வகையான உடற் பயிற்சிகள் இருக்கின்றன. எத்தனையோ வகையான விளையாட்டுக்களும் இருக்கின்றன. ஒரு சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், ஒரு முறையான முடிவுகளை உங்களுக்குக் காட்டும். வெவ்வேறு விதமான உங்கள் அணுகுமுறை, வெவ்வேறு விதமான மனோ நிலை யையும் மகிழ்ச்சியையும் உங்களுக்குக் கொடுக்கும். 'இதுதான் சிறந்த முறை. இதையே பின்பற்றுங்கள். நீங்கள் வலிமையோடு வாழலாம்' என்று ஒரு பயிற்சியை நான் உங்களுக்குத் தந்துவிட முடியாது. "ஒருவர் விரும்பும் உணவு, மற்றொருவருக்கு நஞ்சு. என்பது பழமொழி. அதுபோலவே, பயிற்சி முறைகளிலும் ஆட்ட முறைகளிலும் ஒருவருக்கொருவர் நிச்சயம் வித்தியாச ப் படுகின்றார்கள். வெவ்வேறு விதமான கொள்கைகளையும் கொண்டிருக்கின்றார்கள்.