பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நீங்கள் உங்களின் தேவைக்கேற்பவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சில குறிப்புகளைத் தரு கிறோம். தனிப்பட்ட முறையில் உங்களின் விருப்பம். உண்மையாகவே நீங்கள் தேவையென்று நினைப்பது. உங்களின் தற்போதைய தேகவலிமை. நீங்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றீர்கள் ? உங்கள் இலட்சியம் என்ன ? உங்களால் இலட்சியத்திற்கேற்ப உழைக்கும் சக்தி உள்ளதா? உங்களது குடும்பச் சூழ்நிலை எப்படி?. உங்களுக்கு உபயோகப்படும் விளையாட்டுச் சாதனங் கள் வசதிகள் இருக்கின்றனவா? மேலே கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு, உங்களது உடல் வலிமைக்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். பாடுபடுங்கள். பயன் பெறுங்கள். நீங்கள் தேர்ந்தெடுப்பதற் காக மூன்று வகையான உடல் வலிமை தரும் பயிற்சிகளைத் தொகுத்துத் தருகிறோம். 1 . உயிர்க் காற்றைச் சேர்க்கும் பயிற்சிகள். 2. உடற்பயிற்சி முறைகள் 3. விளையாட்டுக்களும், விருப்பமான உடலியக்கங் களும்