பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 1. உயிர்க் காற்றுப் பயிற்சிகள் (Aerobics) உடலுக்கு ஆதாரம் உயிர்க்காற்றுதான். பிராணனைக் காக்கின்ற பிராணவாயுவை, உடலுக்குள் மிகுதியாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் உயிர்க்காற்றுப் பயிற்சி யாகும். இயற்கையாகவே தொடர்ந்து நாம் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் அதிகமாக உயிர்க்காற்றைப் பெறுவது தான் இலட்சியமாக அமைகிறது. - - நீண்ட நேரம் தொடர்ந்து செய்யும் பயிற்சிகள், நுரையீரல் களை உயிர்க்காற்றால் நிறைத்து விடுகின்றன. இதனால் பலப் பல நலன்கள். இவற்றைக் குறித்து ஏற்கனவே முன் பகுதியில் எழுதியிருப்பதைக் காண்க. உயிர்க் காற்றை நிறையப் பெற்று நலமடைவதின் மேன்மையை 1970ம் ஆண்டிலிருந்து தான், வல்லுநர்கள் கண்டறிந்து, உடல் நலப்பயிற்சிகளில் இதனை மக்கள் அதிக மாகச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். உயிர்க் காற்றைப் பெற, பெரும் பங்கு வகிக்கும் பயிற்சி கள் மூன்று. அவை ஒட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல். ஒட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல் இவற்றில் எந்தப் பயிற்சியைச்செய்தாலும், அதிக தூரம் அதிக நேரம்’ என்று நீட்டித்துக் கொண்டு செய்வது தான் எதிர்பார்த்த பலனை நல்கும். உதாரணமாக, ஒட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றால், அதிக தூரம் ஒடவேண்டும். அதிக நேரம் ஒட வேண்டும். அதை .ெ மதுவாகவும் ஒடலாம், வேகமாகவும் ஒடலாம். வேக