பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 2. Fym so fl&Gib Äp (Below Average) சாதாரணமாக, ஒரு மனிதன் எவ்வாறு சக்தியுடன் வாழ. வேண்டுமென்று இயற்கை விதித்திருக்கின்ற பலத்திற்கும் கீழே நலிந்து வாழ்பவர்கள். இந்தக் கூட்டம் தான் நாடு. முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. 3. சராசரி மனிதர்கள் (Normal) அதிக பலமும் இல்லாமல், அதிக நலிவும் இல்லாமல் நடுத்தரமாக வாழும் நடமாடும் நாயகர்கள் இவர்கள். இந்த நிலையில் வாழ்ந்தாலும், அது நியாயமான வாழ்க்கை தான். நரகமும் இல்லாத, சொர்க்கமும் அமையாத திரிசங்கு" உலகத்தில் வாழ்பவர்கள். 4. Su sòl solo un ser suñrs sir (Super Normal) இவர்கள் தாம் மனிதர்கள்’ என அழைக்கப்படும் மாண்புமிக்கவர்கள் ஆவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் இனிதாக வாழத் தகுந்தவர்கள். எதையும் சாதிக்கும் இலட்சிய வேகமுள்ளவர்கள். சமுதாய செழுமைக்குத் தூண்களாகவும் விளங்குபவர்கள். இந்த மாண்பும் பெருமையும் உடையவர்கள் உடலாளர் கள், விளையாட்டு வீரர்கள். உடற்பயிற்சியில் ஈடுபடும் உன்னதமானவர்கள். நீங்கள் அனைவரும் உன்னதமானவர்களாக விளங்க வேண்டும் என்பதே என் விருப்பம். இந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே, இந்த நூல் உங்கள் கையில் ஒளிர்கிறது.