பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஏன் உங்களை வலிமையுடன் வாழச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி எழுதுகிறேன் என்றால்... இந்த வாழ்வின் உண்மையை நீங்கள் மனமார புரிந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு வாழ்க்கையின் ஆதாரம் தாயும் தாரமும் தான். அதனால் தான், தாய்க்குப்பின் தாரம் என்ற பழமொழி யையும் பாடமாக்கி வைத்திருக்கின்றார்கள். வலிமை இல்லாதவனை. ...

  • இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்தத் தாய் வேண்டாள்

செல்லாது அவன் வாய்ச் சொல்' என்று ஒளவை பாடிச் சென்றிருக்கின்றாள். ஆதாரமாய் அமைந்த அன்னையும், ஆருயிராய் அமைந்த மனைவியும் அவனை வேண்டாள், விரும்பாள் என்றால்; அவன் வாய்ச் சொல்லுக்கு மதிப்பே இல்லை என்றால், அவன் வாழ்ந்து என்னதான் பயன் ? இந்தக் கருத்தை வற்புறுத்தி நான் எழுதிய பாடல் ஒன்று “இப்படி அமைந்திருக்கிறது. வலிமை இல்லாதவன் மனிதனில்லை. மானம் மரியாதை எதுவுமில்லை. நலிந்தே வாழ்வது வாழ்வாகுமா ? நடைப் பிணம் என்பது பெயராகுமா ?