பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நேரத்தை நீட்டித்துக் கொண்டு தொடர வேண்டும், (Duration). ஒரு குறிப்பிட்ட பயிற்சியை தொடர்ந்து நீண்ட நேரம் செய்ய நேரும் பொழுது தான், உறுப்புக்கள் செம்மை யடைகின்றன. செழுமை பெறுகின்றன. ஒரு நாளில் நீண்ட நேரம் செய்து விட்டால் போதுமா என்றால் போதாது. அதை அடிக்கடி, பட்டியல் போட்டுக் கொண்டு, விடாமல் செய்ய வேண்டும் . (Frequency) நீண்ட நேரமும், தொடர்ந்து செய்யும் பொழுதும், உடல் உறுப்புக்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற அளவுக்கும் சற்று மேலே அமையுமாறு கடுமையான முறையிலும் (Intensity) செய்ய வேண்டும். • அவற்றையே தொடர்ந்து, திரும்பத் திரும்ப செய்கிறபோது (Repetition) தான், அதிக வலிமையைத் தரும் என்கிற பயிற்சி முறைகளை, முறையோடு பின்பற்றி வர வேண்டும். அத்தகைய திட்டமிட்ட முயற்சியே தேடிய எழுச்சியைத் திரட்டித்தரும். இறுதியாக ஒன்று. - உடலுக்கு வலிமை தரும் பயிற்சிகள் என்று பல தரப் பட்ட இயக்கங்களைப் பலரும் பரிந்துரைப்பார்கள். அவரவருக்கு விருப்பமான பயிற்சிகளை அறிவுறுத்துவதும். விரும்புவோர் விரும்பியவாறு ஏற்றுக் கொண்டு செயல்படு வதும் தவறல்ல. நியாயமான் ஏற்பு தான். சிஎல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல் கின்றன’ என்பது ஒரு பழமொழியாகும். அதுபோலவே எல்லா தரப்பட்ட பயிற்சி முறைகளும், உடல் நலத்தை நல்கவும், வலிமையை வழங்கவுமே முயல்கின்றன. உதவு கின்றன.