பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சிலர் பிராணவாயுவை நிறைத்துக் கொள்ளும் பயிற்சிகளே சிறந்தது என்பார்கள். - சிலர் எடைப்பயிற்சியே சிறந்தது என் பார்கள். சிலர் தொடர்ந்து சுற்று முறைப் பயிற்சிகளாக பலவற் றைத் தேர்ந்தெடுத்து, ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும் . (circuit training) என்பார்கள். சிலர் கம்பியில் தொங்கி ஆடும் பயிற்சிகள் நல்லது என்பார்கள் . - - .. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறைக் கு, பிராண வாயுவை துரயிைரல்களில் நிறைத்து விடும் காற்றுப் பயிற்சி யும். அதற்கான செயல்முறைகளும் தான் தேவை என்பார்கள் வல்லுநர்கள். அதாவது பெது ஒட்டமே அதற்குண்டான மேன்மைமி கு வழி என் பார்கள். l எந்த முறையை நீங்கள் பின்பற்றினாலும், விருப்பத்துடன் செய்யுங்கள். வெறுப்பை எந்த நேரத்திலும் அதன் மேல் சுமத்தி விடாதீர்கள். போர் அடிக்கிறது என்று புலம்பி விடாதீர்கள். ஆர்வம் குறையும் பொழுது வேறு பயிற்சிக்கு மாற்றி, உங்கள் முயற்சியில் விறுவிறுப்பை ஏற்றிக் கொள்ளுங்கள் . - வலிமையான வாழ்வு உங்கள் வழி நடைப்பாதையில் வந்து வணங்கி நிற்கும். வாழ்வின் சுகங்கள் எல்லாம் வந்து, உங்களை வரவேற். கும், வாழ்த்துரைக்கும். பரவசப்படுத்தும், - -