பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வாழ்வின் மேன்மைகள் உங்களை வலம் வரும். நலம் தரும் மேம்படுத்தி உயர்நிலைக்கு ஏற்றி விடும். நாம் எத்தனை காலம் வாழ்கிறோம் என்பதில் சுவை இல்லை. சுகம் இல்லை. பெருமை இல்லை. நாம் எவ்வளவு வலிமையோடு வாழ்கிறோம். என்பதில் தான் பெருமை இருக்கிறது . உங்கள் கவனத்திற்கு இறுதியாக ஒரு குறிப்பு. எனக்குத் தள்ளாத வயதாகி விட்டது என்று பலர் கூற, நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

  • தாங்கள் தளர்ந்து போனதைக் குறிப்பதற்காக அவர்கள் அப்படித் தான் கூறுவார்கள்ெ

ஆனால் அதன் பொருள் அப்படி அல்ல. வயது ஆக ஆக, பல்ப்பல வியாதிகள் வந்து மனிதர் களிடையே பலிஞ் சடுகுடு ஆடுகின்றன. நோய்கள் முதலில் உணவைத் தான் கட்டுப்படுத்து கின்றன. பத்தியம்' என்று கூறி பைத்தியமாக மனிதர்களை மாற்றி விடுகின்றன. உணவின் அளவு குறைய குறைய, உணவில் பத்தியம் ஏறி, சுவை மறைய மறைய:நோய் குறைகிறது. அதுபோலவே உடலின் வலிமையும் தெளிவும் பொலிவும் குறைகின்றன. ஆகவே, வயது ஏறிக் கொண்டே போனாலும், வலிமை யான உடல் உள்ள வர்கள், வாய்க்கு ருசியான உணவைச் சாப் பி டுகின்ற வரம் பெற்றவர்களாக வாழ்கின்றார்கள்.