பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 எந்த வகை உணவைத் தந்தாலும், அதை வேண்டா மென்று தள்ளிவிடாமல், ஏற்றுக் கொள்கின்ற வயதைத் தான் தள்ளாத வயது என்று நாம் கூறுகிறோம். குழந்தைகள் எந்த உணவையும் தள்ளுவதில்லை. அது போலவே, நோய் அணுகாத வலிமையுடையார்கள் வயதில் பெரியவர்களாக இருந்தாலும், உணவு முறையில் சிறுவர்களாக மாறி தள்ளாமல் சுவைத்துச் சாப்பிடுகின்றனர். உண்ணும் உணவிலே சுவை. உறங்கும் நிலையிலே நிம் மதி. நடக்கும் போதில் செம்மாந்த நடை நினைப்புகளில் எழுச்சி! இதுதான் வலிமையானவர்கள் வாழும் வாழ்க்கை முறை. இப்படிப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டுமென்றால், ங்களும் வலிமையோடு வாழவேண்டும். நீங்களு も巧 நீங்களும் வலிமையோடு வாழலாம். வாழ முடியும் என்ற நம்பிக்கையை இன்றே நினைவில் ஏற்றுங்கள். மனதை மாற்றுங்கள் மனம் உண்டானால் மார்க்கம் நிச்சயமாக உண்டு. அதனால்தான் பனம் போல் வாழ்வு’ என்கிறார்கள். மனம் போல வாழுங்கள் மகிழுங்கள். மற்றவர்க்கும் -- உதவுங்கள். மகிழுங்கள்.