பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வலிமை தரும் எளிய பயிற்சிகள் அன்றாடக் கடமைகளை அவசியம் செய்தாக வேண்டும். என்ற அத்யாவசியமான சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதுபோலவே, உண்ணுதல் உறங்குதல் என்பன போன்று உடற்பயிற்சிகளையும் ஒரு சீராக, தினந்தோறும் இடை விடாமல் செய்து வந்தால், செய்பவர்க்கு வலிமை தானே வந்துவிடும். இந்தப் பயிற்சி முறைகளை படிப்படியாக உயர்த்திக் கொண்டே செய்வது, செய்து வ குவது சிறப்பான வழியாகும். முதல் படி தினமும் உடலுறுப்புக்கள் இதம் பெறுவதற்காக செய் கின்ற பயிற்சிகள். ஆரம்பத்தில் எளிமையானதாக இருக்க வேண்டும். 1. நிமிர்ந்து நின்று. கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக உயர்த்திவிட்டு, பிறகு குதிகாலில் உட்காருவது போல குந்துதல். (Squat)