பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 89

அனுப்பிய விண்ணப்பத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும்

நினைவு - 7 : திருச்சி மாவட்டக் கல்வியதிகாரியின் தனி அலுவலர் திரு எஸ். வீராசாமிப் பத்தரை இட்டுக் கொண்டு கோவை சென்று உரியவர்களைப் பார்க்க வேண்டும் என்ற திட்டத்தைத் தாளாளர்முன் வைத்தேன் அவரும் ரூ 60/= தந்து அனுப்பினார். நானும் வீராசாமிப் பத்தரும் ஏப்ரல் முதல் வாரத்தில் கோவை சென்றோம் மண்டல ஆய்வாளர் அலுவலக மேலாளருக்கு ரூ25தந்தது, தெய்வாதீனமாகக் கோவை மாவட்டக் கல்வியதிகாரி திரு சாம்பசிவம் பிள்ளை நட்பு கிடைத்தது. அவருடன் கூனூர் சென்று அங்கு முகாமிட்டிருந்த V.R. அரங்கநாத முதலியாரைப் பார்த்துப் பேசியது போன்றவை யாவும் ஒரு நீண்ட கதை. திரு பிள்ளையவர்கள் இரவு எட்டுமணிக்குத் திரு முதலியாருடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார். நானும் என் கோரிக்கையை அவர் முன் வைத்தேன்.

வி.ஆர்.ஆர் . நீங்கள் ஏன் அங்குப் போய் மாட்டிக் கொண்டிர்கள்? உயர்நிலைத் தொடக்கப் பள்ளியியையே நடத்தத் தெரியாதவர்கள், கஞ்சப் பிரபுக்கள் ஆசிரியர்க்குப் பத்தும் பன்னிரண்டுமாக ஊதியம் தருகின்றனர். நாங்கள் தரும் மானியத்தையேனும் தந்து விடுகின்றார்களா? அதிலும் (உள்கணக்கில் ஏதாவது பிடித்தமா? தெரியவில்லை

நான் : நான் பணியைக் கோரித் தலைமையாசிரியர் பதவியை ஏற்றேன். நன்கு படித்து முதல் வகுப்பில் மூன்றாவது நிலை தேர்ச்சி (அறிவியல் - வேதியியல் பெற்றிருக்கின்றேன். துறையூருக்கு அருகிலுள்ள சிற்றுர் என் சொந்த ஊர், திருமணமாகி விட்டது. போர்த் துறையைத் தவிர, வேலை வாய்ப்பு எங்கும் இல்லை. ஊதியம் குறைவாக இருந்தாலும், நில வருவாயைக் கொண்டு காலம் தள்ளுவேன் காலத்தை வீணடிக்காமல் மேலும் படித்துத் தகுதியாக்கிக் கொண்டு சில ஆண்டுகளில் கல்லூரியில் பணி ஏற்க முயல்வேன். என் ஊழ் எம்.ஏ. அல்லது எம்எஸ்சி. பட்டம் பெறமுடியாது செய்துவிட்டது.