பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ஆர். நாகரெட்டியார் 113

சந்தமார் நாகரெட்டியார்க் கிந்நூல் கால்புறு காணிக்கை யாமால்.

என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இவரைப் பற்றிய விவரமாக “நூல் முகத்தில்" பதிவு செய்துள்ளேன்.

"ஞானசம்பந்தரை" இன்னொரு பேரன்பர் திரு. P.B.K. இராஜா சிதம்பர ரெட்டியாருக்கு.

ஒப்பிலாப் பண்பன், நுட்பமார் அறிஞன்,

உறுவது தேர்ந்துணர் விறலோன்; திப்பிய மிக்க கொள்கையன்; அறிஞர்

சிந்தனைக்கு விருந்தருள் நிறத்தன்; துப்பமை உளத்தன், எம்குல விளக்காய்த்

துலங்குவோன்; நியதியைத் தெளிந்தோன்; செப்பமார் "இராஜா சிதம்பரம்" என்னும்

செம்மலுக் குரியதிந் நூலே,

என்ற பாடலால் அன்புப் படையலாக்கியுள்ளேன்.

1908 ஆகஸ்டு 3-ஆம் நாள் தோன்றி இன்றளவும் (4-8-98 வாழ்ந்து வருபவர். பெருவளநல்லுர் இரெட்டிகுலச் செம்மல் திரு. PB. கிருட்டிணசாமி ரெட்டியாரின் அருமந்த மகன். இலால்குடி உயர்நிலைப் பள்ளி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, தேசியக் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியர் கார்டினர், பேராசிரியர் சாரநாதன் திரு ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற நல்லாசிரியரிடம் பயின்றதால் அவர்களுடைய நற்பண்புகள் யாவும் இவரிடம் வந்தமைந்தன. நாட்டாரின் தமிழ்ப்பற்று இவரிடம் தொற்றிக் கொண்டதால் இவர் இன்றளவும் தமிழ்ப் பற்றாளராகத் திகழ்ந்து வருகின்றார்.

திரு. இராஜா சிதம்பரம் ஒரு சிறந்த தேசியவாதி: நாட்டுப்பற்றாளர். காந்தியார் வழியொழுகும் நற்பண்பினர் இன்றளவும் கதருடையே அவர் திருமேனிக்குப் பொலிவு தருவதைக் காணலாம். செல்வச் செழிப்புடைய குடும்பத்தில் பிறந்தவராயினும் எளிமை வாழ்க்கையையே விரும்புபவர் அங்ங்னமே வாழ்பவர்.

8