பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நீங்காத நினைவுகள்

சாதி, சமய, அரசியல் பற்றுகளைக் கடந்து மனிதநெறியில் வாழ்பவர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இன்றி எல்லாக் கட்சியினரிடமும் நன்குபழகி அவர்கள் நட்பைப் பெற்றுத் திகழ்பவர். பேரறிஞர் அண்ணாவிடம் தம்நெஞ்சைப் பறிகொடுத்தவர்.

1949-50இல் திருச்சி மாவட்டக் கழகத் தலைவராகவும், 1952-57இல் சென்னை மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் (M.L.A) இருந்து பணியாற்றிய காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டியவை. உயர் குலத்தில் சாதியல்ல பிறந்தவராதலால் "குலத்தளவேயாகும் குணம்" என்ற முதுமொழிக்கு ஏற்பப் பரந்த நோக்கமும் மனிதாபிமானமும் கொண்டவராகத் திகழ்கின்றார், மூதறிஞர் அருமை இராஜாஜியிடம் நெருங்கிப் பழகி அவர்தம் ஆசியைப் பெற்றவர். திரு. சி. சுப்பிரமணியம் இவருடைய நெருங்கிய நண்பர். மூதறிஞர். தி.மு. நாராயணசாமிப்.பிள்ளை இவர்தம் குடும்ப நண்பர் வழிகாட்டி சில குறுக்குவழிகளைக் கையாள விரும்பாமையால் அமைச்சர் பதவி இவருக்கு வரவில்லை. எனினும், அமைச்சருக்கு மேல் மதிப்புடன் திகழ்கின்றார். பொதுத் துறைகளில் பணியாற்றியபொழுது "பண்புடையார் பட்டுண்டு உலகம்" "உயர் திணை என்மனார் மக்கட் சுட்டே என்ற ஆன்றோர் வாக்குகட்கு எடுத்துக் காட்டாக இருப்பவர். எவர்மாட்டும் புன்முறுவலுடன் இனிமையாகப் பேசுபவர். காண்டற் கெளியவர்: கடுஞ்சொல் அறியாதவர். நாட்டு நலனிலும், இளைஞர் கல்வியிலும் பேரூக்கம் காட்டுபவர். இத்தகைய பெரியவர்பால் நான் கொண்டுள்ள அன்பிற்கும், மரியாதைக்கும் அறிகுறியாக இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்கினேன்.

நினைவு 5 : இந்த இரண்டு நூல்களுக்கும் வெளியீட்டு விழா எடுத்து அதில் இந்த இரு பெரியார்களின் திருக்கைகளில் முதற்படியைக் கொடுக்க வேண்டும் என்பது என் அன்புள்ளம் கருதியது. விவேகாநந்தர் உயர்நிலைப் பள்ளியில் வெளியீட்டு விழா அமைத்துத் தருமாறு திரு. நா. அரங்கராசனுக்கு தலைமையாசிரியர் எழுதினேன். அவரும் என் வேண்டுகோட்கிரங்கி 241.1987 அன்று