பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 125

நற்குரு தேவர் திருவடிக் கன்பன்:

நாடுவாழ் வுறச்சிறை புக்கோன்; பற்பமென் மலர்வாழ் கலைமகள் தனக்கே

பண்புயர் பொருளெலாம் அளித்தோன்." கற்பனைக் குயில்வாழ் தமிழ்ப்பொழில் நடுவண் கலைக்களஞ் சியம்அமைத் திட்டோன், அற்புதன்; எங்கள் நல்அவி னாசி

ஆண்டகைக் குரியதிந் நூலே.

என்ற பாடல் மூலம் அன்புப் படையல் செய்து நாள் அய்யாமீது கொண்டிருந்த மதிப்பையும், மரியாதையையும் புலப்படுத்திக் கொண்டேன். தமிழ்ப் பணியே தம் பிறவிப் பணியாகக் கொண்ட அய்யா அவர்களின் ஆசியாலும் அணிந்துரை வழங்கிய திரு. சுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்தாலும், நூல் தமிழகத்தில் பெருமித்துடன் உலவுகின்றது.

நினைவு - 5 : 1977 செப்டம்பரில் நடைபெற்ற என் மணிவிழாவில் பல பெரியோர்களின் ஆசிச் செய்திகள் அடங்கிய மணிவிழா மலர் ஒன்று வெளியிடப் பெற்றது. அதில் அய்யா அவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிய செய்தியின் தமிழ் வடிவம் இது. டாக்டர் ந. சுப்புரெட்டியார் நம்முடைய புகழ் வாய்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர். தமிழ் வளர்ச்சி குறித்து அவரது உற்சாகம் பாராட்டத்தக்கது. அவர் இலக்கியம், அறிவியல் துறைகளில் புன்னூல்கள் இயற்றியுள்ளார். அவருடைய மாணாக்கர்களும், அன்பர்களும் அவருடைய மணிவிழாவைக் கொண்டாடுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அவர் உடல் நலத்துடனும் மன வளத்துடனும் அவர் தேர்ந்தெடுக்கும் துறைகளிலெல்லாம் பல்வேறு சிறப்புகளுடன் பணியாற்ற (? ண்டும் என்று - - ᎯᏣ; ன் இ b G iண்டுகிே

8 அக்காலத்தில் பதினைந்து இலட்சம் ரூபாயை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரிக்கு அளித்ததாக செய்தித் தாளில் படித்தேன். 9 மணிவிழா மலர் (1977 பக். 20