பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

நீங்காத நினைவுகள்

இன்னும், மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியி ருப்பு விடுத லைப்பெரும் படையின் தொகுப்பு

கல்லா ருக்கும் கலைவி ருந்து கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து

தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்கு கையில் சிறுத்தை எழும்

தமிழர் தவம்கொ டுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலைமேடை’

என்று கூறுவதைக் காணலாம்.

காந்தியடிகளைப் பற்றிக் கூறுவது :

துயர்நீக்கும் விடுத லைப்போர்

தொடங்கிட வேண்டி நாட்டை நயமுற அழைத்தார் அன்றே:

நாற்பது கோடி மக்கள் புயலெனக் கிளம்பக் கண்டோம்;

தனித்ததோர் புலம்ை கண்டோம்.'

என்று காட்டுவார்.

3

4

புகழ் மலர்கள் - பக். 50

மேலது - பக், 47