பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தர வடிவேலு 149

விடைத்தாள்கள் திருத்துவதிலும் ஐந்தாண்டுகள் வாய்ப்பு தந்து உதவினார். எனக்குப் பெண் பிள்ளை இன்மையால் வறுமைத் துன்பத்தால் பாதிக்கப் பெறவில்லை "வருவது தானே வரும்" "பருவத்தால் கன்றில் பழா" என்ற பொன் மொழியின் பொருள் தெளிவாயிற்று.

நினைவு - 7 : திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ. தொடங்குவதற்காக நான் தமிழக அரசுக்கு அனுப்பிய விண்ணப்பம் (1960 பல்வேறு இடர்ப்பாடுகளைத் தாண்டி 1969-இல் அக்டோபர் ஆண்டிற்குப் பத்தாயிரம் ரூபாய் வீதம் ஐந்தாண்டுகட்கு மானியம் பெற்றது காலம் தவறி வந்தமையால் 1970-71இல் எம்.ஏ. தொடங்கலாம் என்று கருதியது பல்கலைக் கழகம் அந்தக் காலத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தவர்கள் மூவரே. ஒருவர் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொருவர் ஆறு திங்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். மூன்றாமவர் (டாக்டர் மு.வ சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் இச்செய்தியைத் துணைவேந்தர் டாக்டர். D. சகந்நாத ரெட்டிக்கு எடுத்துச் சொல்லி விளக்கி இருந்தேன். எனினும், பேராசிரியர் பதவிக்குத் தக்கவர் ஒருவரைப் பரிந்துரைக்குமாறு சென்னை, அண்ணாமலை, மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கட்கு வேண்டுகோள்கள் விடுத்திருந்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் துணைவேந்தர் டாக்டர் ஆதிநாராயணா'தக்கவர் ஒருவரும் இல்லை என்று கைவிரித்து விட்டார். மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. நால்வர் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். (டாக்டர் மனத்தில் அழுக்கின்மையால் தெ.பொ.மீயின் கடிதத்தை எனக்குக் காட்டி விவரம் கேட்டதில் விளம்பரத்தில் குறிப்பிட்ட தகுதிப்படி ஒருவரும் தக்கவர் இல்லை என்று விளக்கி விட்டேன் தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலு, "இப்பல்கலைக் கழகம் எம்.ஏ. கற்பிப்பதில்லை. பிஎச்டி எம்.லிட். பட்டங்கட்கு மட்டிலும் ஆய்வுகள்

9 நினைவுக் குமிழிகள்-4 என்ற என் நூலில் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. இந்தநூல் 16-வது கட்டுரையிலும் ஒரளவு சுருக்கமாகக்

கானலாம்.