பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நீங்காத நினைவுகள்

வாழ்ந்தவர் இவ்வாறு ஒரு திருவள்ளுவர் குடும்பமே சென்னை - செனாய் நகரில் இருந்து வந்தது. சுந்தர வடிவேலு அப்போது சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தார் இவரைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கைத் திறந்து வைத்தும் சிறப்புச் சொற்பொழிவாற்றவும் வேண்டிக் கொண்டோம். அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டு கருத்தரங்கைத் திறந்து வைத்து சிறப்புச் சொற்பொழிவும் நிகழ்த்தினர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வு நிகழ்ச்சிகள் மட்டிலும் ஆங்கிலத்தில் அமையும். திருப்பதிவில் தமிழ்த் துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அழைப்பிதழ் ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

இந்தக் கருத்தரங்கின் ஏனைய ஐந்து அமர்வுகள் (1) திருக்குறள் - கலைகளும் அறிவியல்களும் 2 தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் 3 திருக்குறளும் சமயமும் 4) திருக்குறளும் பிறமொழி. இலக்கியங்களும் 15 நிறைவு அமர்வு. ஒவ்வோர் அமர்விலும் தலைவர் ஒருவர் இருப்பார் ஐவர் ஆய்வுக் கட்டுரைகள் படிப்பர். கருத்தரங்கின் நிகழ்ச்சிகள் யாவும் நூல் வடிவம் பெற்றுத் திகழ்கின்றன.

நினைவு 10 : சென்னைப் பல்கலைக் கழகத்தில் "டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழாச் சொற்பொழிவு அறக் கட்டளையின் 1973-74 ஆண்டிற்குரிய சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது (1 சங்ககால வேங்கடம் 2 இடைக்கால இலக்கியத்தில் வேங்கடம் 3 வேங்கடத்தின்மீது எழுந்த நூல்கள் என்ற மூன்று பொழிவுகளை நிகழ்த்தினேன். மூன்று பொழிவுகளும் பாரிநிலையம் (184. பிரகாசம் சாலை, சென்னை-108 நூல் வடிவாக வெளியிட்டுள்ளது. இந்த அரிய நூலுக்கு திரு. சுந்தரவடிவேலு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார் அதில் ஒரு பகுதி :

"டாக்டர் ந. சுப்புரெட்டியார் முறையாகத் தமிழைக் கற்றுத் தேறிய அறிஞர். ஆழ்ந்த புலமையும் கட்டுரைத் திறனும் சொல்லாற்றலும் மிக்கவர்."