பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தர வடிவேலு 153

"திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்" என்னும் தலைப்பில் டாக்டர் ரெட்டியார் ஆற்றிய சொற்பொழிவுகள், நம்மைச சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்லுகின்றன: இடைக்காலத்திற்கு இட்டு வருகின்றன. பிற்காலத்திற்கும் கொண்டு வந்து நிறுத்துகின்றன

விரிந்த தமிழ் இலக்கியத்தின் பல்வேறு இடங்களை அறிமுகப்படுத்தும் இச்சொற்பொழிவுகள் தமிழ்ப் பற்றாளர்கட்குத் தித்திக்கும். அது மட்டுமா? பெரிதும் சமயத் தொடர்புடைய திருவேங்கடத்தைப்பற்றிய சொற்பொழிவுகள் பக்தர்களுக்கும் பரவசமூட்டும்.

இந்த அரிய நூல் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 52-வது பிறந்தநாள் விழாவின் நினைவாக,

பொற்புறு தமிழ்த்தாய் மலரடி பிணித்த

புல்லிய விலங்கினைத் தகர்த்து நற்புகழ்த் தமிழர் இதயமாம் அணையில்

நாவலர் போற்றிட அமர்த்திச் சிற்பவண் குறளாம் ஆணை யெப்புறத்துக திகழ்ந்திடத் தமிழ்ப்பணி புரியும் அற்புதக் கருணா நிதியெனும் தலைவர்

அன்பினுக் குரியதிந் நூலே. என்ற பாடல்மூலம் அன்புப் படையலாக்கப் பெற்றுள்ளது. கலைஞருக்கும், திரு. சுந்தரவடிவேலுக்கும் உள்ள நெருக்கத்தை உணர்ந்தமையால் இப்படையல் எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது.

நினைவு - 11 : 1972 - அக்டோபர் 24ஆம் நாள் திருப்பதித் தமிழ்ப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். என் இளைய மகன் டாக்டர் இராம கிருட்டிணன் சென்னை ஸ்டான்லியில் M.D. வகுப்பில் சேர்ந்து படிக்கின்றான். திருப்பதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் மூத்தமகன் இராமலிங்கத்தைச் சென்னைக்கு மாற்றிக்