பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நீங்காத நினைவுகள்

கொண்டு சென்னையில் குடியேறினேன். 1978 சனவரி 14ஆம் நாள் பொங்கல் விழாவை முடித்துக் கொண்டு. ஒய்வு ஊதியம் இல்லாத நிலை. 1977 டிசம்பரில் சென்னை வந்தபோது U.G.C உதவிக்காக சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வந்தேன். தமிழ் கலைக் களஞ்சிய முதன்மை ஆசிரியர் திரு. பெ. தூரனையும் சந்தித்தேன். :ஓய்வு பெற்று நான் சென்னையில் குடியேறும் திட்டத்தை அவரிடம் சொன்னேன். தானும் ஓய்வு பெறப் போவதாகக் கூறி தன் பதவிக்கு ஒரு விண்ணப்பம் அனுப்புமாறு பணித்தார். வேங்கடவாணனின் கருணைப் பெருக்கை வியந்து போற்றுகின்றேன். திருப்பதியில் பணியாற்றிய என்னை சென்னையிலும் தமிழ்ப்பணி ஆற்றத் திருவுள்ளம் கொள்ளுகின்றான் போலும் எனவும் வறுமைத் துன்பத்தைப் போக்க ஏதோ படி அளக்க எண்ணுகின்றான் போலும் எனவும் எண்ணினேன். திருப்பதி திரும்பியதும் அழகிய முறையில் விண்ணப்பம் தயாரித்து அஞ்சல் வழி அனுப்பி வைத்தேன்.

திருப்பதிக்கு வந்த நாள் முதல் எனக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கும் என் அரிய நண்பர் திரு G. தாமோதரன் தான் முன்னரே பழகிய திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கட்கு நான் பல்கலைக் கழகத்தின்மீது வழக்குத் தொடுத்தவன் என்றும் எனக்குக் கலைக் களஞ்சியப் பணி நல்கினால் தொந்தரவு கொடுப்பேன் என்றும் எழுதியதாகப் பின்னர் பணியில் சேர்ந்தபின் அறிந்தேன்.

டாக்டர் சுந்தரவடிவேலு தமிழ் வளர்ச்சிக் கழக நிர்வாகக் குழுவில் இருப்பது எனக்குத் தெரியாது. திரு. சி. சுப்பிரமன்னியமும் பொள்ளாச்சி வள்ளல் திரு. நா. மகாலிங்கமும் குழுவில் இருந்தனராகப் பின்னர் அறிந்தேன். "உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றான்." அடியேனுக்குத் துணை நிற்கும்போது திரு தாமோதரனின் கடிதமோ பிற எதிரான செயல்களோ என்னை என்ன செய்ய முடியும்? நிர்வாக சபை கூட்டத்தில் என் நியமனம் பற்றிய பொருளை ஆயும்போது திரு. செட்டியார் நான் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின்மீது

14 பெரி. திரு 2.5:3