பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 161

இவர் காலத்தில் இவரால் ஆர்வமுடன் அமைக்கப் பெற்ற இலக்கியக் கூட்டங்கள் ஒன்றில் இளசைக் கிழார் எஸ். சோமசுந்தர பாரதியார் எழுந்தருளி பேசியதை நினைவுகூர்கிறேன். நான் (1934-39 இல் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றபோது திரு. பாரதியார் பேச்சைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. தமிழறிவு என்னிடம் நிரம்பப் பெறாத காலம் அது. அவர் மேடை ஏறி பேசும்போது சிங்கம் கர்ச்சனை செய்வது போலிருக்கும். நீதிமன்றத்தில் சிறந்த வக்கீல் ஒருவர் வாதம் செய்வது போலவும் இருக்கும். கம்பீரமான தோற்றம், செந்நிறத் திருமேனி, முறுக்கு மீசையுடன் திகழும் முகப்பொலிவு முதலியவை இவர்தம் ஆவேசப் பேச்சுக்குக் களைதட்டும். காரைக்குடி எழுந்தருளின இப்போது தளர்ந்த திருமேனி, நரைத்த மீசை, சுருங்கிய முகம் கொண்டபாங்கில் பேசிய பேச்சில் கங்கையின் வேகம் இல்லையாயினும் யமுனையின் ஆழமும் தெளிவும் இருந்தன. தம்முடைய தொல்காப்பிய சில படலங்கள் அச்சேறி அதிக அச்சுப் பிழைகளுடன் வெளிவந்ததைக் கண்டு வருந்தி "பிழை மலிந்த சருக்கங்களாக" வெளிவந்துள்ளன என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது.

நினைவு 3 : தமிழில் கலை நூல்களனைத்தையும் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் செயற்பட்ட இராஜாஜி, திசு அவினாசிலிங்கம், சி. சுப்பிரமணியம் போன்ற ஆர்வலர்களைக் காண்டல் அரிதாகவே உள்ளது. 1938இல் வெளிவந்த கலைச்சொல்லாக்கப் பணியில் செலவானது போக எஞ்சிக் கேட்பாரற்றுக் கிடந்த ரூபாய் இரண்டாயிரத்து சில்லறை வள்ளல் அழகப்பரின் அறக்கட்டளையிடம் (Algappa Trust) ஒப்படைத்தார் இராஜாஜி. இப்பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு இதுவே சரியான நிறுவனம் என்று கருதினார் அப்பெருமகன், 1958 என நினைக்கின்றேன். வ.சுப. மாணிக்கம் தலைமையில் இதற்காக ஒரு சிறு குழுவும் அமைக்கப்பெற்றது. இதில் என்னையும் ஓர் உறுப்பினராகச் சேர்த்தார்கள். நானும் 1960இல் திருப்பதியில் பணியேற்று என் முயற்சி வேறு திசையில் சென்றதால் அதுபற்றிய

1 I