பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நீங்காத நினைவுகள்

வளர்ச்சி பற்றி டாக்டர் மா கொண்டிருந்த எண்ணங்களை இக்குழு அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்பட்டன. தமிழ்நாடு. தமிழ்மொழி, தமிழ் இனம். தமிழ் அரசு, தமிழ் சமுதாயம், தமிழ் சமயம், தமிழ் கல்விபற்றிய இவர்தம் சிந்தனைகளை "தமிழ்க் கதிர்" என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளதைக் காணலாம். பிள்ளையார் சுழிக்குப் பதிலாக "த" தமிழைக் குறிப்பது போடும் அளவுக்கு இவர்தம் தமிழ்ப்பற்று முற்றியிருந்தது.

நினைவு - 17 . இவரால் தோற்றுவிக்கப் பெற்ற தமிழ் வழிக் கல்வி இயக்கம். "எல்லாம் தமிழ், எதிலும் தமிழ்" என்ற கொள்கைகள் போற்றத்தக்கவை செயற்படுத்தினால் அவற்றின் விளைவு - பலன் ஆகியவை தெரியும். இவை மக்கள் இயக்கமாக இருக்கும் வரையில் பெரும் புகழ் தருவதாக இருக்கும். அரசியல் வாதிகள் துணை கொண்டு அரசு இதில் பங்கு கொண்டால் நாட்டில் கொந்தளிப்புதான் ஏற்படும் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று ப்ேசி வரும் போக்கு நன்மை விளைவிப்பதில்லை ஆயிரக்கணக்கான வெண்பொற்காசுகளை நன்கொடையாக வழங்கி "யானைக்குத் தீனி போடுவது போல்" கட்டணம், ஆடையணிச் செலவு. இருப்பூர்திக் கூலியாள்போல் புத்தக மூட்டை - உணவு - குடிநீர் மூட்டை சுமத்தல் போன்ற வீண் வேலைகளைச் செய்யச் செய்யும் பெற்றோர்களை எதிர்த்துப் பயன் என்ன? இத்தகைய பள்ளிகட்கு நடுவண் அரசு அங்கீகாரம் இருப்பதால் அவை மழைகாலத்துக் காளான்கள்போல் எங்கும் தோன்றி வளர்கின்றன எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகள் அறிவு பெறுவதற்காகப் படிக்கும் போக்கைக் கருதுவதில்லை. எப்படியாவது நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இந்த மனப்பான்மையை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு "வாணிகம்" போல் பள்ளிகளை நடத்தி கோடீசுவரர்களாகின்றனர் என்பதை எல்லோரும் அறிவர். இன்றைய மழலைப் பள்ளிகள் விழலைப் பள்ளிகளாவதைக் காலம்தான் காட்டும். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினர் பிரசாரத்தால் மக்களைத் தம் வழிக்குத் திருப்பி தமிழ்ப்பள்ளிகளைத் தோற்றுவித்து சிறப்பாக