பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 181

நடத்திடக் காட்டுவது அறிவுடைமையாகும். அரசு நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விக்குச் செல்வாக்கு இல்லை என்பது தெளிவு அங்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்லூரிகளிலும் கையூட்டால் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளில் இடம் பிடிப்பது கண்கூடு. மதிப்பெண் பெறுவதில் பண விளையாட்டால் முறைகேடுகள் "இலைமறை காய்களாக" நடைபெறுவது எல்லோருக்கும் தெரியும் புகைபிடித்தல், மது அருந்துதல் தீமை பயக்கும் என்பதை எல்லோரும் அறிவர். சட்டத்தாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையாகி விட்டது. இவற்றிற்கெல்லாம் ஆண்டவன்தான் வழிகாட்ட வேண்டும். இந்த விளைவுகளையெல்லாம் எல்லோரையும்போல டாக்டர் மாணிக்கமும் அறிவார். எல்லோரும் விலகியிருக்க, டாக்டர் மாணிக்கமும் அவரோடு இணைந்த ஒரு சிலரும் தாம் பிறப்பெடுத்ததன் பயன் என்று கருதித் தமிழ் வழிக்கல்வியினை ஊக்குவிக்கின்றனர்.

இங்ங்ணம் தமிழுக்காகவே வாழ்ந்து, ஒல்லும் வகையெல்லாம் தமிழ்ப்பணியே தெய்வப்பணி எனப் போற்றி வாழ்ந்து காட்டியவர் டாக்டர் மாணிக்கம். நாடு சுதந்திரம் பெறுவதற்காக அமைக்கப் பெற்றது காங்கிரஸ். எத்தனையோ தலைவர்கள் அதில் பங்குகொண்டு பலன் காணாமல் மறைந்தனர். மகாத்மா காந்தி அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்த காலத்தில் சுதந்திரம் கிடைத்தது. அதுபோலத் தமிழ் வழிக் கல்வி இயக்கம் ஒரு காலத்தில் வெற்றி பெறும். தொடக்கக்காலத்தில் பங்குகொண்ட காங்கிரசுத் தலைவர்கட்கு சுதந்திரம் கிடைக்கும் நாள் தெரியாதிருந்தது போல, இப்போது தமிழ் வழிக்கல்வி இயக்கத்தில் உழைப்போருக்கு வெற்றிகிட்டும் நாள் தெரியவில்லை; அவ்வளவுதான்.

இன்னொரு முக்கியமான கருத்து, நம் நாட்டை ஆண்டவர் அந்நியர். வெள்ளையர்: எப்படியோ அவர்களை ஒருவாறு விரட்டிவிட முடிந்தது. ஆனால் ஆங்கிலவழிக் கல்வியை ஆதரிப்பவர்கள் நம்மவர்கள். இவர்கள் மனப்பான்மையை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதைக் கருத்தில்