பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நீங்காத நினைவுகள்

இருத்திச் சிந்திக்க வேண்டும். தம் காலத்தில் இந்த இயக்கம் வெற்றி பெறாது என்பதை நிலவும் சூழ்நிலை அவருக்கு அறிவித்திருக்கும்.

எத்தனையோ அறிவியல் உண்மைகள் கொள்கை யளவிலேயே உள்ளன. காலப்போக்கில் ஒன்றிரண்டு செயற்பட்டு வருகின்றன. அணுவைச் சிதைக்க முடியாது என்று கருதிய காலமும் ஒன்று இருந்தது. எத்தனையோ ஆண்டுகட்குப் பின்னர் நம் காலத்தில் அணு உடைபட்டது. ஆற்றல் வெளிவந்தது. தொடக்கத்தில் அதன் பலன் அழிவாக இருந்தது. தற்காலத்தில் அணுவாற்றல் வேறு வழிகளில் ஆக்கத்திற்குப் பயன்பட்டு வருகின்றது என்றாலும் இன்னும் ஒரு சில வல்லரசுகள் அணு குண்டுகளைத் தம் கையில் வைத்துக் கொண்டு பூச்சாண்டிக் காட்டி வருகின்றன. - வரம் பெற்ற பத்மாசுரன் "உன் தலையில் கை வைப்பேன்" என்று சொல்லிக் கொண்டு திரிந்ததுபோல

ஏதோ பல்கலைக் கழகப் பணியாற்றுவதற்குப் புதுச்சேரி சென்றார். எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். "இரட்டைக் காப்பியங்கள்" "எந்தச் சிலம்பு?" போன்ற நூல்களை எழுதியவர்தாம். நுகர்வினை முடிந்தது. மறைந்து விட்டார்

இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை"

என்று மாடலன் செங்குட்டுவனுக்கு உணர்த்திய உண்மையை அறியாதவரா டாக்டர் மாணிக்கம்? இறைவனின் அவதாரங்கள் கூட சில ஆண்டுகள் உலகில் நடமாடி சில கடமைகளை ஆற்றிவிட்டு மறைகின்றன. நம்முடைய பிறப்பும் இறப்பும் அதுபோலத்தானே.

இன்று வள்ளல் அழகப்பர் இல்லை: மூதறிஞர் டாக்டர் வ.சுமாவும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் வள்ளலின் பிறந்தநாள் விழாவில்,

13 சிலப். நடுகல்காதை - அடி 181-82