பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 7

நான்கு நாட்களும் பகலில் இசை விருந்து, நலுங்கு முதலியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன. உறவினர்களும் அன்பர்களும் ரொக்கம், பட்டாடைகள் மணமக்களுக்கு வழங்கி வரும் மரபும் நடைமுறையில் இருந்தது. செல்வர் வீட்டுத் திருமணத்தில் வழக்கமாக இருந்து வரும் சின்னமேளம் (தேவதாசி இசை விருந்து நலுங்கு முதலிய நிகழ்ச்சிகளில் பெரும்பங்கு பெற்றிருந்தாள் நான் முசிறி. திருச்சியில் பயின்று திரும்பும் வரை (1939) இந்த அலங்காரக் கொட்டகை சிதையாமல் இருந்ததாக நினைவு.

நினைவு 5 : இத்தகைய நல்லுள்ளம் படைத்த திரு. K.N. நல்லப்ப ரெட்டியார் 1930 முதல் தீராத நோயால் துன்பப் பட்டார். புலிவலத்தில் துறையூர் - திருச்சி சாலையில் உள்ள ஒரு சிற்றுார்) அக்காலத்தில் புகழோங்கியிருந்த டாக்டர் பட் (கன்னடப் பாப்பனர் என்பார் குடும்ப டாக்டர் போலானார். 1930ல் ஒருமாதக் காலத்திற்கு மேல் புலிவலத்தில் தங்கி சிகிச்சை பெறவேண்டியிருந்தது. வீடு அமர்த்தி ஒரு குடும்பம் இவருக்காகவே இருந்தது. அப்போது இவர் தந்தையார் இருந்தார் நான் விடுமுறையில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கி உதவியாக இருந்தேன். ஒரு சமயம் நானும் இவருடைய தந்தையாரும் அம்மணிமங்கலம், சாத்தனூர் வழியாகக் கால்நடையில் திரும்பியது இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. இருவரும் பேசிக்கொண்டுவரும்போது தம்முடைய சீமந்த புத்திரனின் எதிர்காலம் என்னாமோ என்று கவலைப்பட்டது அவரது பேச்சின் அடிநாதமாக ஒலித்ததைக் கண்டேன். சில வாரங்களில் குணமாகி வீடு திரும்பினார். அப்ப்ோது நான் துறையூரில் 8-ஆம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு விடுமுறையில் இருந்தகாலம்.

நினைவு 6 : 1936-ஆம் ஆண்டு செப்டம்பர் என் திருமணம் நாமக்கல் அருகிலுள்ள பொட்டணம் என்ற சிற்றுரில் நடைபெற்றது கோட்டாத்தூரிலிருந்து பொட்டணம் போவதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் ஒரு பேருந்து, ஒரு மகிழ்வுந்து அமர்த்தப் பெற்றன. நெருங்கின உறவினர்கள் சிலர், நண்பர்கள் சிலர் பேருந்தில் வந்தனர். K.N. நல்லப்பரெட்டியார். அவர் மனைவி,