பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நீங்காத நினைவுகள்

கற்றலின் ஈர்ப்பு விசை" என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர் திரு. கே.ஆர். அவர்கள் (கே.ஆர். என்றே நாங்கள் அவரைக் குறிப்பிடுவோம்). சிறார்களின் வயதுக்கேற்றவாறு மனவளர்ச்சி இருக்குமென்றும், இதற்கேற்றவாறு அவர்களின் விருப்பமும் மாறக்கூடியதென்றும் உளவியல் அறிஞர்கள் கூறுவதைத் தம் அநுபவத்தால் நன்கு தெளிந்தவர். ஹெர்பார்ட் கூறும் மனத்தைத் தயாரித்தல், எடுத்துக்கூறல், ஒப்பிடல் பொதுவிதி காணல், விதியைச் செயற்படுத்தல் என்ற ஐந்து படிகளையும் தம் அநுபவமாக்கிக் கொண்ட நல்லாசிரியர்.

ஹெர்பார்ட்டின் ஐந்து படிகளில் மனத்தைத் தயாரித்தல் மிகவும் முக்கியமானது. அறிவு மூன்று விதமாக வளர்ச்சியைடகின்றது; பழைய அறிவுடன் புதிய பொருள்கள் சேர்வதாலும் இவ்வாறு பெறும் செய்திகள் அநுபவமாக மாறுவதாலும், புதிய செய்திகளின் தொடர்புகளை மேலும் மேலும் கண்டறிவதாலும் அறிவு வளர்ச்சியடைகின்றது என்று கல்வி வல்லுநர்கள், உளவியல் சான்றோர்கள் கூறுவர். இவற்றுள் மூன்றாவது முறையே முக்கியமானது. ஏற்கெனவே அறிந்துள்ளவற்றுடன் புதிய செய்திகளை இணைத்தால்தான் அவை நன்கு பொருந்திய அநுபவமாகும். எனவே கற்பிக்கும், ஆசிரியர் மாணாக்கர்களின் முன்னறிவினைச் சில வினாக்களால் சோதித்து அறிதல் வேண்டும். இதனை அறியாது கற்பிக்கும் ஆசிரியரின் முயற்சி கொன்னே கழியும். கற்பிக்கும் பாடத்தையொட்டி ஒரு சில தேர்ந்தெடுத்த வினாக்களை விடுத்தால் மாணாக்கர்கள் ஏற்ற விடைகள் பகர்வர். அவ்விடைகளிலிருந்து அவர்களின் முன்னறிவுத் நிரளையை (Apperceptive mass) தெரிந்து கொள்ளலாம். இந்தப் படியைச் "சிக்கனப் பிடித்துக் கொண்டு திரு. கே.ஆர். கற்பித்தார் என்பதை இப்போது நினைவுகூர முடிகின்றது.

நினைவு - 2 : இந்த நல்லாசிரியர் வகுப்பிற்குள் நுழைவதே அற்புதமாக இருக்கும். பஞ்சகச்சம், மூடிய நிலையிலுள்ள மேலங்கி (Close coat) அணிந்திருப்பார் சாதாரணமாக பிஸ்கோத்து நிறம், பாலாடை (Cream) நிறம் கொண்ட துணிகளாலேயே இவை செய்யப்