பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 31

நெருக்கடியில் தரமுடியாத நிலை ஒன்றிரண்டு திங்களில் பரமபதித்தார் சடங்குக்குப் போய் வந்தேன்.

女 女 女

கல்வியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று சால்பினை வளர்ப்பது. ஆசிரியர் இதில் கவனம் செலுத்தாவிடில் சால்பிற்கு எல்லைக் கோடுகளை யாவர்தாம் வரையறுப்பார்? சால்பினை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியரையன்றி வேறு எவரும் மேற்கொள்ளல் இயலாது. அப்படி மேற்கொண்டாலும் தக்க பலனைக் காணல் இயலாது. ஆசிரியர்களே மாணக்கர்களின் வீர வழிபாட்டிற்குரியவர்கள். ஆசிரியருக்கு அநுபவம் பெருகப் பெருகச் சால்பினை வளர்க்கும் பெருவழி மிகவும் வியப்பினைத் தருவதாக அமைகின்றது. அந்த வழியில் காணும் ஒவ்வொன்றும் புதியனவாகவே தோற்றமளிக்கும். நன்மையும் தீமையும் நல்கும் ஆற்றலும் இவர்கள் கையில்தான் உள்ளது. இதனை அவர்கள் சரியாக உணர்தல் கூடும். இந்தப் பொறுப்பினை இவர்கள் சரியாக உணர்வார்களாயின் அது சுமக்க முடியாத அளவிற்குப் பெரிதாக இருப்பது தெரிய வரும். கே.ஆர். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து பணியாற்றியவர். என்னிடம் பல நற்குணங்கள் அமைந்ததற்கு இவரே முக்கிய காரணராக அமைகின்றார். இன்று நான் சமூகத்தில் ஓர் அறிஞனாக, நல்லவர்களில் ஒருவனாக, மதிப்பும், மரியாதையும் பெற்று வாழ்பவனாக (வயது 83 இல் வாழ்வதற்கு இவரும் இவர் போன்ற பல நல்லாசிரியர்களுமே காரணர்களாக அமைந்தனர் என்பது என் நீங்காத நினைவாக அமைகின்றது.